உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறைபிடிப்பேன்
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கரைத் துடைப்பேன்
ஏனென்றால் உன் பிறந்தநாள் !
கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒளி வாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச் செய்வேன்
இலையெல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்
ஏனென்றால் உன் பிறந்தநாள் !